Wednesday, 3 November 2010
தீபாவளி பண்டிகை
தீமைகள் யாவும் விலகியே நல்ல
தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!
எட்டுத் திக்கும் வாழும்
ஏற்றமிகு தமிழர் கூட்டம்
என்றும் நல்வாழ்வு பெற்றிட
எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
என்றன் அன்பான வாழ்த்து!
வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
வகையான வாழ்வு நடத்திட
வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
வளமான மனமதைப் பெற்றிட
வள்ளல் தன்மையும் கற்றிட
வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!
நாட்டு மக்கள் எல்லாம்நலமும்
வளமும் என்றும்நமது நாட்டிலேயே
பெற்றிடநாட்டு ஒற்றுமையை என்றும்
நலமோடும் வளமோடும் காத்திட
ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!
அண்டை அயலார் அனைவரும்
அணுவின் ஆற்றலை நல்ல
ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
அணுஆயுத பயத்தை விடுத்து
அண்டமதைக் காத்திட எந்தன்
அன்பான தீபாவளி வாழ்த்து!
நாம் அனைவரும் சேர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்க உழைக்க வேண்டி உள்ளது. எவ்வளவு வெடிகள் வாங்க வேண்டும்? பள்ளிகளில் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் குழந்தைகள் வெடி வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். ஆனாலும் . நாம், சுற்றுச்சூழல் மாசுபடுத்தல் பற்றியும், காற்று மாசுபடுதல் பற்றியும், ஒலி மாசுபடுதல் பற்றியும் எடுத்துக் கூறி வெடிப் போடும் பழக்கத்தை மெதுவாக நிறுத்த வேண்டும் .இது எமக்கும் நாட்டிற்கும் நன்மையளிக்கும் ,
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய திபாவளி வாழ்த்துக்கள் .
Subscribe to:
Posts (Atom)