feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

Friday 11 December 2009

நங்களும் கண்டு பிடித்தோம்


மனிதன் தேவைகள் வரும்போது அவற்றை நிறைவு செய்வதற்காக சிந்திக்கின்றான் அதில் கிடைக்கும் விளைவுகள் கண்டுபிடிப்பு எனலாம்.அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் தேவைகள் ஏற்பட்டது

உலகம் இன்று பல கண்டுபிடிப்புகள் செய்தாலும் எம்மவர்கு அதனை பயன்படுத பல தடைகள் இருந்த கதை எல்லருக்கும் தெரியும் தானே .அந்த நேரத்தில என்கட ஆக்கள் பட்ட பாடும் சொல்ல வேனுமொ.எண்டாலும் இருக்கிறதை வச்சு வாகனம் ஓடினம் .இண்டைக்கு தாவரஎரி திரவம்{பெட்ட்ரொல்} கண்டுபபிடிக்கமுதல் 1994-95 காலத்தில் வடி எண்டு சொல்லுர தென்னம்கள்ளு மூலம் பதப்படுதி எடுத்த alcoholலை விட்டு வாகனம் இயக்கினம் .
சவர்கரம் இல்லாட்டாலும் பனம் பழம் கொண்டு உடுப்பு தோய்த்தோம்.,பட்டாசு இல்லாதபொதும் அலுமினிய குழாயிலும்,சையிக்கில் வால்கட்டையிலும் உள்ளே தீ குச்சி மருந்தை அடைது தீயில் பொட்டு வெடிக்க வைப்பதும்.என பலவற்றை செய்தோம்

இது இத்துடன் நின்றுவிடவில்லை உயிர் வாழ்கைக்கு அத்தியாவசிய மூலம் ஆன விவசாயத்துறையிலும் இயற்கை முறை மூலம் உரம்,பீடை நாசினிகள் என பலவற்றை இயற்கையோடு ஒன்றிய காலத்தேவை கருதி பயன்படுத்தினம்.