Showing posts with label உயிரினங்கள். Show all posts
Showing posts with label உயிரினங்கள். Show all posts
Tuesday, 30 March 2010
மனிதனை போன்றே மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றனவா?
உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் செயற்பாடுகள் மூளையால் கட்டுப்படுத்தப்படுகின்றது .ஒரு மனிதன் கொஞ்ச நேரம் நிதானமாக யோசிக்கிறார், சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று வேலையை ஆரம்பிக்கிறார். இதை சிந்தித்து முடிவெடுத்தல் என்கிறோம். மிருகங்கள் இப்படி சிந்தித்து முடிவெடுக்கின்றனவா அல்லது எந்திரம் போல வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப ஒட்டோமேட்டிக்காக முடிவெடுக்கின்றனவா நாம் அன்றாட வாழ்வில் வீட்டு செல்லப்பிராணிகளை பார்க்கின்றோம் பறவைகளை பார்க்கின்றோம் அவற்றின் செயற்பாடுகளை சற்று உன்னிப்பாக அவதானித்து பார்த்தால் ஒவ்வொன்றும் வேறு பட்ட இயல்புகளை கொண்டு இருப்பதை காணலாம் , குரங்குகள், புறாக்கள் போன்ற எளிய மிருகங்களும் தம்மை உணர்கின்றன, யோசிக்கின்றன, மனத்தில் தீர்மானம் செய்தபிறகு செயலில் ஈடுபடுகின்றன.
மீன்களின் மூளை மனநுகர் கலங்கள் கொண்ட பகுதி நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது .இவை நன்கு பழகிய மனிதரை உணர்கின்றன.பறவைகளின் மூளை பறப்பதற்கும்,பார்வை புலன் ,உடல் சமநிலையில் இருப்பதுக்கு ஏற்ப கலங்கள் கொண்ட பகுதி நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது
டொல்பினுக்கு ஒரு சோதனை தந்தபோது அது சிறிது நேரம் நிதானித்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை முடிவு செய்துவிட்டு பின் செயலில் இறங்குவதைஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பரிணாமத்தில் ஏதோ ஒரு விலங்குக் கூட்டத்தில்தான் உணர்வு பிறந்திருக்கிறது. அதன் காரணமாக சிந்தனையும் தோன்றியிருக்கிறது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். பறவை பாலூட்டிகளிடம் அது இருப்பதால் அதற்கும் முந்தைய ஊர்வனவற்றில் அது தோன்றியிருக்கலாம் என்று தெரிகிறது.
Sunday, 6 September 2009
செயற்கையாக ஓர் உயிரினம்
ஓர் உயிரினத்தை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தசை, எலும்பு, நரம்பு இவற்றின் அடிப்படையான புரதத்தை தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தயாரிக்க முடியும் என்று ஹார்வர்டு மருத்துவப்பள்ளியின் மரபியல் பேராசிரியர் ஜார்ஜ் சர்ச் கூறுகிறார். கோடிக்கணக்கான செயற்கை ரிபோசோம்கள் இணைந்து சிக்கலான புரதத்தை உருவாக்குகின்றன. இந்த புரதத்திற்கு firefly luciferase என்று பெயர்.ரிபோசோம்கள் என்பவை செல்களில் உள்ள ஒரு பகுதிப்பொருள் ஆகும். இவை செல்களில் உள்ள பிற பகுதிப்பொருள்களாகிய டி என் ஏ க்கள் மற்றும் ஜீன்களின் கட்டளைகளை ஏற்று தசைகள், எலும்புகள், நரம்பு இழைகள் இவற்றால் ஆன உடலை உருவாக்குகின்றன. மேலும் என்சைம்களின் உதவியால் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கி அன்றாட வாழ்க்கை சுழற்சியை ஏற்படுத்துகின்றன. புரோட்டின் சேர்க்கையை உருவாக்கும் சிக்கலான பணியை ரிபோசோம்கள் செய்வதால் உயிரினத்தின் அடிப்படையே இவைகள்தாம்.
செயற்கையான உயிரினத்தை உருவாக்குவது தன்னுடைய நோக்கம் இல்லையென்றும், ஆனால் தற்போதைய ஆய்வு முடிவுகள் செயற்கையான ஒரு உயிரினத்தை உருவாக்கும் திசையில் செல்லுவதாகவும் பேராசிரியர் சர்ச் கூறுகிறார்.
சர்ச்சும் அவரது சக ஆய்வாளர் மைக்கேல் ஜீவெட்டும் இ கோலி பாக்டீரியாவில் இருந்து இயற்கையான ரிபோசோம்களை பிரித்தெடுத்தனர். இவை மீண்டும் அவற்றின் பகுதிப்பொருட்களாக பிரிக்கப்பட்டன. ribosomal RNA க்கள் நீக்கப்பட்டு மீண்டும் புதிய மூலக்கூறுகளாக இணைக்கப்பட்டன. ஒரு செயற்கையான புதிய உயிரினத்தை இதன்மூலம் உருவாக்க முடியும் என்றாலும், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் சர்ச் கூறுகிறார்.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/03/090309104434.htm
Subscribe to:
Posts (Atom)



.jpg)
.jpg)



