Wednesday, 3 November 2010
தீபாவளி பண்டிகை
தீமைகள் யாவும் விலகியே நல்ல
தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!
எட்டுத் திக்கும் வாழும்
ஏற்றமிகு தமிழர் கூட்டம்
என்றும் நல்வாழ்வு பெற்றிட
எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
என்றன் அன்பான வாழ்த்து!
வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
வகையான வாழ்வு நடத்திட
வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
வளமான மனமதைப் பெற்றிட
வள்ளல் தன்மையும் கற்றிட
வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!
நாட்டு மக்கள் எல்லாம்நலமும்
வளமும் என்றும்நமது நாட்டிலேயே
பெற்றிடநாட்டு ஒற்றுமையை என்றும்
நலமோடும் வளமோடும் காத்திட
ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!
அண்டை அயலார் அனைவரும்
அணுவின் ஆற்றலை நல்ல
ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
அணுஆயுத பயத்தை விடுத்து
அண்டமதைக் காத்திட எந்தன்
அன்பான தீபாவளி வாழ்த்து!
நாம் அனைவரும் சேர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்க உழைக்க வேண்டி உள்ளது. எவ்வளவு வெடிகள் வாங்க வேண்டும்? பள்ளிகளில் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் குழந்தைகள் வெடி வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். ஆனாலும் . நாம், சுற்றுச்சூழல் மாசுபடுத்தல் பற்றியும், காற்று மாசுபடுதல் பற்றியும், ஒலி மாசுபடுதல் பற்றியும் எடுத்துக் கூறி வெடிப் போடும் பழக்கத்தை மெதுவாக நிறுத்த வேண்டும் .இது எமக்கும் நாட்டிற்கும் நன்மையளிக்கும் ,
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய திபாவளி வாழ்த்துக்கள் .
Sunday, 9 May 2010
உலகுக்கு எம்மை பரிசளித்த அன்னையர்
வயிற்றில் கருவாக மட்டும் நம்மை தாங்குபவள் அல்ல
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும்
நம்முடன் தோளோடு தோளாக வரும் தெய்வம் அம்மா
மழலைப் பருவ குறும்புத்தனத்தின் காயங்களுக்காய்
நிதமும் விழித்திருந்து என் காயங்களுக்கு மருந்தானாய்....
பசி என்ற சொல்லை எனக்கு காட்டாமல்
பசியை நீ மட்டும் உண்டு வாழ்ந்திருக்கிறாய் தாயே .
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் மகத்துவத்தை அறிமுகப்படுத்தி
என் தலை கோதி விட்டது உன் விரல்கள் அல்லவா!....
வேலை தேடும் மும்முரத்தில் மாநகர வீதிகளில்
அடிபட்ட போது ஆறுதல் மருந்தானது உன் வார்த்தைகள்...
எனக்கு வேலை கிடைத்தபோது வெறுமனே நான்
அகமகிழ்ந்தேன்....நீதானே புதிதாய் உயிர் பெற்றாய் தாயே....
போலியில்லா உன்பேச்சைக் கேட்டு உன் மடியில் தலைசாய்த்து
உன் விரல்களால் என் தலை கோதும் தருணங்கள் போதும் தாயே
இந்த இயந்திரமயமான வாழ்க்கை பலவந்தமாக
என் சிறகுகளைப் பிடுங்கி என்னை கோழை ஆக்குகிறது...
தலை வலியில் நெற்றி தடவும்போதும்,மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்,தோல்விகளில் தட்டிக்கொடுத்து
ஊக்கமளிக்க யாரும் இல்லாதபோதும், நினைவுகளில்
உன் அருமை புரிகிறது தாயே....
உலகிலேயே அழகானது மலர்கள்.....மிகவும் பிரகாசமானது
கதிரவன்.....மிகவும் ரம்மியமானது நிலவு......மிகவும் தெளிவானது
கடல்..மிகவும் வசீகரமானது தென்றல்... ஆனாலும் இவை எதுவும்
ஈடு ஆகுமோ எல்லாம் வல்ல உன் அன்பிற்கு......
இறுதியாக ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன்,.....ஆவியாக
அவள் மறைந்த பின்னாலே அழுது புரளுவதும் புகழ் பாடுவதும்
அமைதியைத் தராது, அடித்தே சொல்லுவேன்....
உருவம் இல்லாத தெய்வத்தின் அருளுக்கு ஏங்குவதை
விடுத்து கண்ணெதிரில் இயற்கை தெய்வமாய் வாழும்
உங்களின் அம்மாவை வணங்குங்கள்.....
அத்தெய்வம் உங்களை என்றும் காத்தருளும்...
எந்த விதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத உண்மையான
அன்பு அம்மாவிடம் மட்டுமே கிடைக்கும்....இது உறுதி....
அன்னையரை அவர்களின் முதுமை காலத்தில் குழந்த்தைகள் போல் அன்பும் அரவணைப்பும் கொடுத்து நம்மை ஆலக்கய் அவளை மகிழ்விப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் ஒரே ஒரு நன்றிக்கடன் ஆகும்.அவர்களுக்கு ஒவொரு நாள்ளும் அன்னையர தினம் தான்
அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்....
Thursday, 15 April 2010
புகைத்தல் தன்னையும் சுற்றத்தையும் கொல்லும் உயிர் கொல்லி !
உலகத்தில் அதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கிய இடம் வகிப்பது புகைத்தல். புகைத்தலை குறைப்பதற்காக எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்படாலும் புகைத்தலினால் ஏற்படுகின்ற இறப்புக்கள் கூடிக்கொண்டேதான் இருக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணமாக இரண்டைச் சொல்லமுடியும்.
முதலாவதாக புகைத்தலுக்குரிய சிக்கிறேட், சுருட்டு போன்றவற்றை உற்பத்தி செய்யும் கம்பனிகளுக்கும் முதலாளிகளுக்கும் பின்புலமாக அரசியல் செல்வாக்கு. அதுதான் நமது அரசுகள் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மறைமுகமாக நடைபெறும் இந்த
பொருட்களின் வியாபர முன்னேற்ற உத்திகளை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை.இது தொடர்பாக சாதாரண மக்களாகிய நம்மால் பெரிதளவான மாற்றங்களை கொண்டுவந்திடமுடியாது.
ஆனாலும் புகைத்தலை குறைக்க முடியாமல் செய்யும் இரண்டாவது காரணம் மக்களின் அறியாமை.இது சம்பந்தமாக நம்மால் நிச்சயமாக ஏதாவது செய்யமுடியும் . நமது மக்கள் புகைத்தல் சம்பந்தமாக எவ்வளவு மூட நம்பிக்கைகள் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு புகைத்தலால் ஏற்படும் உடற் பாதிப்புக்கள் பற்றிய எனது இடுகைக்கு வந்த பின்னூட்டம் ஒன்றே சான்று சொல்லும்.
அவர் சொல்லும் இந்த கொடுமையான நிகழ்வுகளை விட புகைத்தல் கொடுமையானதுதான். பயங்கர வாதத்தால் ஏற்படுகின்ற மரணங்களை விட புகைத்தலால் ஏற்படுகின்ற மரணங்கள் எத்தனையோ மடங்கு அதிகம் என்பதை உணர்ந்து கொள்ளும் நிலையில் நம் மக்கள் இல்லாமையே இந்த புகைத்தலை குறைக்க முடியாமல் உள்ளமைக்கான காரணமாகும்.
ஆனாலும் பயங்கர வாதம் என்பது குழு சம்பந்தப் பட்டது புகைத்தலோ தனி மனிதன் சம்பந்தப் பட்டது. தனி மனிதனின் மனதை மாற்றிக் கொண்டால் புகைத்தல் என்ற பயங்கரத்தை நாம் நிறுத்திக் கொள்ள முடியும்.
மற்றும் யுத்தங்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களைவிட பயங்கரமானது புகைத்தலின் போது வெளிவரும் இரசாயனங்கள்.
யுத்தத்தின் போது ஒரேயடியாக ஏற்படும் அழிவு புகைத்தலின் போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
புகைத்தலின் போது 4000 ற்கும் மேற்பட்ட இரசாயனப் பதார்த்தங்கள் வெளி வருகின்றன. இவற்றில் 60 carcinogenic எனப்படுகின்றன.அதாவது அவை மனிதனில் புற்று நோயை ஏற்படுத்தும் சக்தி கொண்ட இரசாயனப் பதார்த்தங்கள்.அவை மனித உடலின் கலத்தின்(cell) உள்ளே சென்று அணு மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே புற்று நோய் உருவாகின்றது.
நமது ஒவ்வொரு இயல்பையும் ( உயரம், பால், நிறம்....) தீர்மானிப்பது ஜீன்(gene). அந்த ஜீணிலேயே மாற்றம் ஏற்படுத்தி புற்று நோய் உருவாக்கும் சக்தி புகைத்தலில் இருக்கிறது எனும் போது ஒவ்வொரு சிக்கிறேட்டும் ஒரு சிறிய அணுகுண்டே!
புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை இந்த சுட்டியில் போய்ப் பாருங்கள்.
இந்த புகைத்தில் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. நகம் ,மயிர் என்பவற்றைக் கூட இந்தப் புகைத்தல் பாதிக்கும்.
இந்தப் புகைத்தலுக்கு எதிராக ஏற்கனவே ஒரு சிறப்பான ரசிக்கும் படியான இடுகையை இட்டு புகைத்தலுக்கு எதிரான அவரின் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு இருந்தார் அந்த நண்பர். அவரின் இடுகை இந்தச் சுட்டியில்
புகைத்தலை குறைப்பதற்கான இந்த முயற்ச்சியில் அனைத்து பதிவர்களும் ஒன்று சேரும் போது ஒரு சிறிய மாற்றமாவது நம்மால் ஏற்படுத்த முடியும். அனைத்துப் பதிவர்களையும் தாழ்மையாக வேண்டிக் கொள்கிறேன் உங்கள் வலைப்பூக்களில் இந்த இடுகையை பிரசுரியுங்கள். புகைத்தலுக்கு எதிரான குரலில் உங்கள் குரலும் ஒன்றாக ஒலிக்கட்டும்.
(இது ஒரு போது இடுகை , என்னுடைய இணைப்போ பெயரோ கொடுக்க வேண்டியதில்லை)
இந்த இடுகையில் புகைத்தலுக்கு எதிராக நான் இரண்டு சுட்டிகல்தான் கொடுத்துள்ளேன் ! நீங்களும் இன்னும் ஆக்க பூர்வமான பதிவுகளின் சுட்டிகளை இணைத்து வெளியிடலாம்.
பிரபல பதிவர் பிரபலமில்லாத பதிவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பதிவர்களையும் தாழமையாக கேட்டுக் கொள்கிறேன் , உங்கள் பதிவுகளில் ஒரு பதிவை இந்த நல்ல விடயத்திற்காக செலவழியுங்கள்.
இந்தச் செய்தி நிறையப் பதிவர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தீர்கள் ஆனால் தயவு செய்து திரட்டிகளில் வாக்களியுங்கள் .

- //பெயர் நீக்கப்பட்டுள்ளது // said...
- இருக்கிறத எல்லாம் விட்டுட்டு கிழவியை தூக்கி மனைல வைங்கற மாதிரி இந்த சிகரட் பழக்கத்தை பிடிச்சு கிழிக்க ஆரம்பிச்சுர்ரிங்க. தீவிர வாதம், பாக், சீனா, லஞ்சம்,ஊழல், மது பழக்கம், சாலை விபத்து, செக்ஸ் குற்றங்களை விடவா இது ஆபத்தானது வெறுமனே சிகரட் பிடிச்சா மட்டும் இதெல்லாம் வந்துராது தலை. இன்னம் நிறைய காரணங்கள் அதோட சேரனும்.//
அவர் சொல்லும் இந்த கொடுமையான நிகழ்வுகளை விட புகைத்தல் கொடுமையானதுதான். பயங்கர வாதத்தால் ஏற்படுகின்ற மரணங்களை விட புகைத்தலால் ஏற்படுகின்ற மரணங்கள் எத்தனையோ மடங்கு அதிகம் என்பதை உணர்ந்து கொள்ளும் நிலையில் நம் மக்கள் இல்லாமையே இந்த புகைத்தலை குறைக்க முடியாமல் உள்ளமைக்கான காரணமாகும்.
ஆனாலும் பயங்கர வாதம் என்பது குழு சம்பந்தப் பட்டது புகைத்தலோ தனி மனிதன் சம்பந்தப் பட்டது. தனி மனிதனின் மனதை மாற்றிக் கொண்டால் புகைத்தல் என்ற பயங்கரத்தை நாம் நிறுத்திக் கொள்ள முடியும்.
மற்றும் யுத்தங்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களைவிட பயங்கரமானது புகைத்தலின் போது வெளிவரும் இரசாயனங்கள்.
யுத்தத்தின் போது ஒரேயடியாக ஏற்படும் அழிவு புகைத்தலின் போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
புகைத்தலின் போது 4000 ற்கும் மேற்பட்ட இரசாயனப் பதார்த்தங்கள் வெளி வருகின்றன. இவற்றில் 60 carcinogenic எனப்படுகின்றன.அதாவது அவை மனிதனில் புற்று நோயை ஏற்படுத்தும் சக்தி கொண்ட இரசாயனப் பதார்த்தங்கள்.அவை மனித உடலின் கலத்தின்(cell) உள்ளே சென்று அணு மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே புற்று நோய் உருவாகின்றது.
நமது ஒவ்வொரு இயல்பையும் ( உயரம், பால், நிறம்....) தீர்மானிப்பது ஜீன்(gene). அந்த ஜீணிலேயே மாற்றம் ஏற்படுத்தி புற்று நோய் உருவாக்கும் சக்தி புகைத்தலில் இருக்கிறது எனும் போது ஒவ்வொரு சிக்கிறேட்டும் ஒரு சிறிய அணுகுண்டே!
புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை இந்த சுட்டியில் போய்ப் பாருங்கள்.
இந்த புகைத்தில் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. நகம் ,மயிர் என்பவற்றைக் கூட இந்தப் புகைத்தல் பாதிக்கும்.
இந்தப் புகைத்தலுக்கு எதிராக ஏற்கனவே ஒரு சிறப்பான ரசிக்கும் படியான இடுகையை இட்டு புகைத்தலுக்கு எதிரான அவரின் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு இருந்தார் அந்த நண்பர். அவரின் இடுகை இந்தச் சுட்டியில்
புகைத்தலை குறைப்பதற்கான இந்த முயற்ச்சியில் அனைத்து பதிவர்களும் ஒன்று சேரும் போது ஒரு சிறிய மாற்றமாவது நம்மால் ஏற்படுத்த முடியும். அனைத்துப் பதிவர்களையும் தாழ்மையாக வேண்டிக் கொள்கிறேன் உங்கள் வலைப்பூக்களில் இந்த இடுகையை பிரசுரியுங்கள். புகைத்தலுக்கு எதிரான குரலில் உங்கள் குரலும் ஒன்றாக ஒலிக்கட்டும்.
(இது ஒரு போது இடுகை , என்னுடைய இணைப்போ பெயரோ கொடுக்க வேண்டியதில்லை)
இந்த இடுகையில் புகைத்தலுக்கு எதிராக நான் இரண்டு சுட்டிகல்தான் கொடுத்துள்ளேன் ! நீங்களும் இன்னும் ஆக்க பூர்வமான பதிவுகளின் சுட்டிகளை இணைத்து வெளியிடலாம்.
பிரபல பதிவர் பிரபலமில்லாத பதிவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பதிவர்களையும் தாழமையாக கேட்டுக் கொள்கிறேன் , உங்கள் பதிவுகளில் ஒரு பதிவை இந்த நல்ல விடயத்திற்காக செலவழியுங்கள்.
இந்தச் செய்தி நிறையப் பதிவர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தீர்கள் ஆனால் தயவு செய்து திரட்டிகளில் வாக்களியுங்கள் .
இப்பதிவு நண்பர் துமிழ்ழின் உடையது.அதை மீள்பதிவிடுகின்றேன் .
Tuesday, 30 March 2010
மனிதனை போன்றே மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றனவா?
உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் செயற்பாடுகள் மூளையால் கட்டுப்படுத்தப்படுகின்றது .ஒரு மனிதன் கொஞ்ச நேரம் நிதானமாக யோசிக்கிறார், சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று வேலையை ஆரம்பிக்கிறார். இதை சிந்தித்து முடிவெடுத்தல் என்கிறோம். மிருகங்கள் இப்படி சிந்தித்து முடிவெடுக்கின்றனவா அல்லது எந்திரம் போல வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப ஒட்டோமேட்டிக்காக முடிவெடுக்கின்றனவா நாம் அன்றாட வாழ்வில் வீட்டு செல்லப்பிராணிகளை பார்க்கின்றோம் பறவைகளை பார்க்கின்றோம் அவற்றின் செயற்பாடுகளை சற்று உன்னிப்பாக அவதானித்து பார்த்தால் ஒவ்வொன்றும் வேறு பட்ட இயல்புகளை கொண்டு இருப்பதை காணலாம் , குரங்குகள், புறாக்கள் போன்ற எளிய மிருகங்களும் தம்மை உணர்கின்றன, யோசிக்கின்றன, மனத்தில் தீர்மானம் செய்தபிறகு செயலில் ஈடுபடுகின்றன.
மீன்களின் மூளை மனநுகர் கலங்கள் கொண்ட பகுதி நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது .இவை நன்கு பழகிய மனிதரை உணர்கின்றன.பறவைகளின் மூளை பறப்பதற்கும்,பார்வை புலன் ,உடல் சமநிலையில் இருப்பதுக்கு ஏற்ப கலங்கள் கொண்ட பகுதி நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது
டொல்பினுக்கு ஒரு சோதனை தந்தபோது அது சிறிது நேரம் நிதானித்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை முடிவு செய்துவிட்டு பின் செயலில் இறங்குவதைஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பரிணாமத்தில் ஏதோ ஒரு விலங்குக் கூட்டத்தில்தான் உணர்வு பிறந்திருக்கிறது. அதன் காரணமாக சிந்தனையும் தோன்றியிருக்கிறது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். பறவை பாலூட்டிகளிடம் அது இருப்பதால் அதற்கும் முந்தைய ஊர்வனவற்றில் அது தோன்றியிருக்கலாம் என்று தெரிகிறது.
Wednesday, 3 March 2010
வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முயற்சியில் வெற்றி
வேளாண்மையிலும் நானோ தொழில்நுட்பத்தினை புகுத்திவிட முயன்றுவரும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதன் முதல் மைல் கல்லை எட்டியுள்ளார்கள். தக்காளியை தமது பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் ஒரு வெற்றியை பெற்றுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள் கார்பன் நுண்குழாய
தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் (carbon nanotubes) இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்தபோது அவர்கள் பெற்ற அவதானங்கள் வரும் காலத்தில் நானோ தொழில்நுட்பம் கொண்ட வேளாண்மைப் பிரயோகத்தில் ஏற்படப்போகும் சாத்தியங்கள், புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமுடியின் தடிப்பில் 1/50000 என்னும் தடிப்பு கொண்ட கார்பன் நுண்குழாய்கள் கலந்து விதைக்கப்பட்ட தக்காளி விதைகள் சாதாரண விதைகளை விட வேகமாக முளை விட்டு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஆர்கன்சா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் தக்காளி விதைகளை காபன்
நுண்குழாய்களுடன் சேர்ந்து சிறிதளவு மண் மற்றும் பாறை துகள்கள் உட் சேர்த்து விதைத்து பரீட்சித்தபோது அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதை அவதானித்துள்ளனர்.
இதில் முளைக்கும் போதான தாவர வித்துக்கள் அகத்துறிஞ்சும் நீரின் அளவை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
சாதாரணமாக 38.9 சதவீதமான நீரை வித்துக்கள் முளைக்கும் பொது அகத் துறிஞ்சுவதாகவும் ஆனால் காபன் சிறு குழாய்கள் கலந்து முளைக்கவிடப்பட்ட குழாய்கள் 57.6 வீத நீதை அகத்துறிஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.
வேளாண்மையிலும் நானோ தொழில்நுட்பத்தினை புகுத்திவிட முயன்றுவரும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதன் முதல் மைல் கல்லை எட்டியுள்ளார்கள். தக்காளியை தமது பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் ஒரு வெற்றியை பெற்றுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் (carbon nanotubes) இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்தபோது அவர்கள் பெற்ற அவதானங்கள் வரும் காலத்தில் நானோ தொழில்நுட்பம் கொண்ட வேளாண்மைப் பிரயோகத்தில் ஏற்படப்போகும் சாத்தியங்கள், புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமுடியின் தடிப்பில் 1/50000 என்னும் தடிப்பு கொண்ட கார்பன் நுண்குழாய்கள் கலந்து விதைக்கப்பட்ட தக்காளி விதைகள் சாதாரண விதைகளை விட வேகமாக முளை விட்டு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஆர்கன்சா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் சேர்ந்து சிறிதளவு மண் மற்றும் பாறை துகள்கள் உட் சேர்த்து விதைத்து பரீட்சித்தபோது அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதை அவதானித்துள்ளனர்.
சாதாரணமாக 38.9 சதவீதமான நீரை வித்துக்கள் முளைக்கும் பொது அகத் துறிஞ்சுவதாகவும் ஆனால் காபன் சிறு குழாய்கள் கலந்து முளைக்கவிடப்பட்ட குழாய்கள் 57.6 வீத நீதை அகத்துறிஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியான விதைகள் சாதாரண நிலையைவிட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது வரை அந்த நுண்குழாய்கள் நீர் உள்ளீட்டை அதிகரிப்பதில் செலுத்தும் சரியான தாக்கம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதில் விஞ்ஞானிகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தாலும் இவ் அறிவியல் அடைவு வெகுவிரைவில் விவசாயத்தில் பெரும் புட்சியை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை
உலகெங்கும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே இருக்கும் ஒரு வகை அபூர்வமான தாமரை மலர்ச் செடி அழிவை நோக்கிச் செல்கிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்குக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்மிட் எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஒரு குட்டையிலேயே இந்த அரிய வகை தாமரை மலர்ச் செடிகள் உள்ளன. அதுவும் தற்போது 15-20 செடிகளே உள்ளன.
இவற்றைப் பெருக்குவதிலும் பார்க்கப் பாதுகாப்பது இப்போது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது. | ||
—பேராசிரியர் பிரமோத் டாண்டன் |
அரிய தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் அழிந்து வருவது உலகளாவிய ஒரு பிரச்சினை என்றும், அதை எதிர்கொள்ள உலகளவில் ஒரு செயற்திட்டம் தேவை என்றும் பேராசிரியர் டாண்டன் கூறுகிறார். உலகளவில் தகுதியும் திறமை வாய்ந்தவர்களும் ஒருங்கினைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"நிம்ஃபியா டெட்ரோகொனா" (Nymphaea tetragona) எனும் அந்த அரிய வகை தாமரைச் செடியை பாதுகாக்க இந்திய அரசு ஓரளவு நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
Subscribe to:
Posts (Atom)