feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

Thursday, 15 April 2010

புகைத்தல் தன்னையும் சுற்றத்தையும் கொல்லும் உயிர் கொல்லி !





உலகத்தில் அதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கிய இடம் வகிப்பது புகைத்தல். புகைத்தலை குறைப்பதற்காக எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்படாலும் புகைத்தலினால் ஏற்படுகின்ற இறப்புக்கள் கூடிக்கொண்டேதான் இருக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணமாக இரண்டைச் சொல்லமுடியும்.

முதலாவதாக புகைத்தலுக்குரிய சிக்கிறேட், சுருட்டு போன்றவற்றை உற்பத்தி செய்யும் கம்பனிகளுக்கும் முதலாளிகளுக்கும் பின்புலமாக அரசியல் செல்வாக்கு. அதுதான்  நமது அரசுகள் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மறைமுகமாக நடைபெறும் இந்த
பொருட்களின் வியாபர முன்னேற்ற உத்திகளை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை.இது தொடர்பாக சாதாரண மக்களாகிய நம்மால் பெரிதளவான மாற்றங்களை கொண்டுவந்திடமுடியாது.
ஆனாலும் புகைத்தலை குறைக்க முடியாமல் செய்யும் இரண்டாவது காரணம் மக்களின் அறியாமை.இது சம்பந்தமாக நம்மால் நிச்சயமாக ஏதாவது செய்யமுடியும் . நமது மக்கள் புகைத்தல் சம்பந்தமாக எவ்வளவு மூட நம்பிக்கைகள் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு புகைத்தலால் ஏற்படும் உடற் பாதிப்புக்கள் பற்றிய எனது இடுகைக்கு வந்த பின்னூட்டம் ஒன்றே சான்று சொல்லும்.



//பெயர் நீக்கப்பட்டுள்ளது // said...
இருக்கிறத எல்லாம் விட்டுட்டு கிழவியை தூக்கி மனைல வைங்கற மாதிரி இந்த சிகரட் பழக்கத்தை பிடிச்சு கிழிக்க ஆரம்பிச்சுர்ரிங்க. தீவிர வாதம், பாக், சீனா, லஞ்சம்,ஊழல், மது பழக்கம், சாலை விபத்து, செக்ஸ் குற்றங்களை விடவா இது ஆபத்தானது வெறுமனே சிகரட் பிடிச்சா மட்டும் இதெல்லாம் வந்துராது தலை. இன்னம் நிறைய காரணங்கள் அதோட சேரனும்.//                                                                                                                                                  

அவர்  சொல்லும் இந்த கொடுமையான நிகழ்வுகளை விட புகைத்தல் கொடுமையானதுதான். பயங்கர வாதத்தால் ஏற்படுகின்ற மரணங்களை விட புகைத்தலால் ஏற்படுகின்ற மரணங்கள் எத்தனையோ மடங்கு அதிகம் என்பதை உணர்ந்து கொள்ளும் நிலையில் நம் மக்கள் இல்லாமையே இந்த புகைத்தலை குறைக்க முடியாமல் உள்ளமைக்கான காரணமாகும்.

ஆனாலும் பயங்கர வாதம் என்பது குழு சம்பந்தப் பட்டது புகைத்தலோ தனி மனிதன் சம்பந்தப் பட்டது. தனி மனிதனின் மனதை மாற்றிக் கொண்டால் புகைத்தல் என்ற பயங்கரத்தை நாம் நிறுத்திக் கொள்ள முடியும்.

மற்றும் யுத்தங்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களைவிட பயங்கரமானது புகைத்தலின் போது வெளிவரும் இரசாயனங்கள்.

யுத்தத்தின் போது ஒரேயடியாக ஏற்படும் அழிவு புகைத்தலின் போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

புகைத்தலின் போது 4000 ற்கும் மேற்பட்ட இரசாயனப் பதார்த்தங்கள் வெளி வருகின்றன. இவற்றில் 60 carcinogenic எனப்படுகின்றன.அதாவது அவை மனிதனில் புற்று நோயை ஏற்படுத்தும் சக்தி கொண்ட இரசாயனப் பதார்த்தங்கள்.அவை மனித உடலின் கலத்தின்(cell) உள்ளே சென்று அணு மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே புற்று நோய் உருவாகின்றது.

நமது ஒவ்வொரு இயல்பையும் ( உயரம், பால், நிறம்....) தீர்மானிப்பது ஜீன்(gene). அந்த ஜீணிலேயே மாற்றம் ஏற்படுத்தி புற்று நோய் உருவாக்கும் சக்தி புகைத்தலில் இருக்கிறது எனும் போது ஒவ்வொரு சிக்கிறேட்டும் ஒரு சிறிய அணுகுண்டே!

   புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை இந்த சுட்டியில் போய்ப் பாருங்கள்.




இந்த புகைத்தில் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. நகம் ,மயிர் என்பவற்றைக் கூட இந்தப் புகைத்தல் பாதிக்கும்.

இந்தப் புகைத்தலுக்கு எதிராக ஏற்கனவே ஒரு சிறப்பான ரசிக்கும் படியான இடுகையை இட்டு புகைத்தலுக்கு எதிரான அவரின் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு இருந்தார் அந்த நண்பர். அவரின் இடுகை இந்தச் சுட்டியில்


புகைத்தலை குறைப்பதற்கான இந்த முயற்ச்சியில் அனைத்து பதிவர்களும் ஒன்று சேரும் போது ஒரு சிறிய மாற்றமாவது நம்மால் ஏற்படுத்த முடியும். அனைத்துப் பதிவர்களையும் தாழ்மையாக வேண்டிக் கொள்கிறேன் உங்கள் வலைப்பூக்களில் இந்த இடுகையை பிரசுரியுங்கள். புகைத்தலுக்கு எதிரான குரலில் உங்கள் குரலும் ஒன்றாக ஒலிக்கட்டும்.
(இது ஒரு போது இடுகை , என்னுடைய இணைப்போ பெயரோ கொடுக்க வேண்டியதில்லை)

இந்த இடுகையில் புகைத்தலுக்கு எதிராக நான் இரண்டு சுட்டிகல்தான் கொடுத்துள்ளேன் ! நீங்களும் இன்னும் ஆக்க பூர்வமான  பதிவுகளின் சுட்டிகளை இணைத்து வெளியிடலாம்.

பிரபல பதிவர் பிரபலமில்லாத பதிவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பதிவர்களையும் தாழமையாக கேட்டுக் கொள்கிறேன் , உங்கள் பதிவுகளில் ஒரு பதிவை இந்த நல்ல விடயத்திற்காக செலவழியுங்கள்.

இந்தச் செய்தி நிறையப் பதிவர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தீர்கள் ஆனால் தயவு செய்து திரட்டிகளில் வாக்களியுங்கள் .

இப்பதிவு நண்பர் துமிழ்ழின் உடையது.அதை மீள்பதிவிடுகின்றேன் .