Sunday, 9 May 2010
உலகுக்கு எம்மை பரிசளித்த அன்னையர்
வயிற்றில் கருவாக மட்டும் நம்மை தாங்குபவள் அல்ல
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும்
நம்முடன் தோளோடு தோளாக வரும் தெய்வம் அம்மா
மழலைப் பருவ குறும்புத்தனத்தின் காயங்களுக்காய்
நிதமும் விழித்திருந்து என் காயங்களுக்கு மருந்தானாய்....
பசி என்ற சொல்லை எனக்கு காட்டாமல்
பசியை நீ மட்டும் உண்டு வாழ்ந்திருக்கிறாய் தாயே .
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் மகத்துவத்தை அறிமுகப்படுத்தி
என் தலை கோதி விட்டது உன் விரல்கள் அல்லவா!....
வேலை தேடும் மும்முரத்தில் மாநகர வீதிகளில்
அடிபட்ட போது ஆறுதல் மருந்தானது உன் வார்த்தைகள்...
எனக்கு வேலை கிடைத்தபோது வெறுமனே நான்
அகமகிழ்ந்தேன்....நீதானே புதிதாய் உயிர் பெற்றாய் தாயே....
போலியில்லா உன்பேச்சைக் கேட்டு உன் மடியில் தலைசாய்த்து
உன் விரல்களால் என் தலை கோதும் தருணங்கள் போதும் தாயே
இந்த இயந்திரமயமான வாழ்க்கை பலவந்தமாக
என் சிறகுகளைப் பிடுங்கி என்னை கோழை ஆக்குகிறது...
தலை வலியில் நெற்றி தடவும்போதும்,மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்,தோல்விகளில் தட்டிக்கொடுத்து
ஊக்கமளிக்க யாரும் இல்லாதபோதும், நினைவுகளில்
உன் அருமை புரிகிறது தாயே....
உலகிலேயே அழகானது மலர்கள்.....மிகவும் பிரகாசமானது
கதிரவன்.....மிகவும் ரம்மியமானது நிலவு......மிகவும் தெளிவானது
கடல்..மிகவும் வசீகரமானது தென்றல்... ஆனாலும் இவை எதுவும்
ஈடு ஆகுமோ எல்லாம் வல்ல உன் அன்பிற்கு......
இறுதியாக ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன்,.....ஆவியாக
அவள் மறைந்த பின்னாலே அழுது புரளுவதும் புகழ் பாடுவதும்
அமைதியைத் தராது, அடித்தே சொல்லுவேன்....
உருவம் இல்லாத தெய்வத்தின் அருளுக்கு ஏங்குவதை
விடுத்து கண்ணெதிரில் இயற்கை தெய்வமாய் வாழும்
உங்களின் அம்மாவை வணங்குங்கள்.....
அத்தெய்வம் உங்களை என்றும் காத்தருளும்...
எந்த விதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத உண்மையான
அன்பு அம்மாவிடம் மட்டுமே கிடைக்கும்....இது உறுதி....
அன்னையரை அவர்களின் முதுமை காலத்தில் குழந்த்தைகள் போல் அன்பும் அரவணைப்பும் கொடுத்து நம்மை ஆலக்கய் அவளை மகிழ்விப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் ஒரே ஒரு நன்றிக்கடன் ஆகும்.அவர்களுக்கு ஒவொரு நாள்ளும் அன்னையர தினம் தான்
அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்....
Subscribe to:
Posts (Atom)