feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

Sunday 6 September 2009

செயற்கையாக ஓர் உயிரினம்

RNA ஓர் உயிரினத்தை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தசை, எலும்பு, நரம்பு இவற்றின் அடிப்படையான புரதத்தை தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தயாரிக்க முடியும் என்று ஹார்வர்டு மருத்துவப்பள்ளியின் மரபியல் பேராசிரியர் ஜார்ஜ் சர்ச் கூறுகிறார். கோடிக்கணக்கான செயற்கை ரிபோசோம்கள் இணைந்து சிக்கலான புரதத்தை உருவாக்குகின்றன. இந்த புரதத்திற்கு firefly luciferase என்று பெயர்.

ரிபோசோம்கள் என்பவை செல்களில் உள்ள ஒரு பகுதிப்பொருள் ஆகும். இவை செல்களில் உள்ள பிற பகுதிப்பொருள்களாகிய டி என் ஏ க்கள் மற்றும் ஜீன்களின் கட்டளைகளை ஏற்று தசைகள், எலும்புகள், நரம்பு இழைகள் இவற்றால் ஆன உடலை உருவாக்குகின்றன. மேலும் என்சைம்களின் உதவியால் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கி அன்றாட வாழ்க்கை சுழற்சியை ஏற்படுத்துகின்றன. புரோட்டின் சேர்க்கையை உருவாக்கும் சிக்கலான பணியை ரிபோசோம்கள் செய்வதால் உயிரினத்தின் அடிப்படையே இவைகள்தாம்.

செயற்கையான உயிரினத்தை உருவாக்குவது தன்னுடைய நோக்கம் இல்லையென்றும், ஆனால் தற்போதைய ஆய்வு முடிவுகள் செயற்கையான ஒரு உயிரினத்தை உருவாக்கும் திசையில் செல்லுவதாகவும் பேராசிரியர் சர்ச் கூறுகிறார்.

சர்ச்சும் அவரது சக ஆய்வாளர் மைக்கேல் ஜீவெட்டும் இ கோலி பாக்டீரியாவில் இருந்து இயற்கையான ரிபோசோம்களை பிரித்தெடுத்தனர். இவை மீண்டும் அவற்றின் பகுதிப்பொருட்களாக பிரிக்கப்பட்டன. ribosomal RNA க்கள் நீக்கப்பட்டு மீண்டும் புதிய மூலக்கூறுகளாக இணைக்கப்பட்டன. ஒரு செயற்கையான புதிய உயிரினத்தை இதன்மூலம் உருவாக்க முடியும் என்றாலும், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் சர்ச் கூறுகிறார்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/03/090309104434.htm

No comments: