feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

Tuesday, 30 March 2010

மனிதனை போன்றே மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றனவா?


dolphin


உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் செயற்பாடுகள் மூளையால் கட்டுப்படுத்தப்படுகின்றது .ஒரு மனிதன் கொஞ்ச நேரம் நிதானமாக யோசிக்கிறார், சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று வேலையை ஆரம்பிக்கிறார். இதை சிந்தித்து முடிவெடுத்தல் என்கிறோம். மிருகங்கள் இப்படி சிந்தித்து முடிவெடுக்கின்றனவா அல்லது எந்திரம் போல வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப  ட்டோமேட்டிக்காக முடிவெடுக்கின்றனவா நாம் அன்றாட வாழ்வில் வீட்டு செல்லப்பிராணிகளை பார்க்கின்றோம் பறவைகளை பார்க்கின்றோம் அவற்றின் செயற்பாடுகளை சற்று உன்னிப்பாக அவதானித்து பார்த்தால் ஒவ்வொன்றும் வேறு பட்ட இயல்புகளை கொண்டு இருப்பதை காணலாம் , குரங்குகள், புறாக்கள் போன்ற எளிய மிருகங்களும் தம்மை உணர்கின்றன, யோசிக்கின்றன, மனத்தில் தீர்மானம் செய்தபிறகு செயலில் ஈடுபடுகின்றன.
மீன்களின் மூளை மனநுகர் கலங்கள் கொண்ட பகுதி நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது .இவை நன்கு பழகிய மனிதரை  உணர்கின்றன.பறவைகளின்   மூளை பறப்பதற்கும்,பார்வை புலன் ,உடல் சமநிலையில் இருப்பதுக்கு ஏற்ப     கலங்கள் கொண்ட பகுதி நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது 
டொல்பினுக்கு ஒரு சோதனை தந்தபோது அது சிறிது நேரம் நிதானித்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை முடிவு செய்துவிட்டு பின் செயலில் இறங்குவதைஆய்வாளர்கள்  குறிப்பிடுகிறார்கள். பரிணாமத்தில் ஏதோ ஒரு விலங்குக் கூட்டத்தில்தான் உணர்வு பிறந்திருக்கிறது. அதன் காரணமாக சிந்தனையும் தோன்றியிருக்கிறது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். பறவை பாலூட்டிகளிடம் அது இருப்பதால் அதற்கும் முந்தைய ஊர்வனவற்றில் அது தோன்றியிருக்கலாம் என்று தெரிகிறது.
விலங்குகளின் தொழிற்பட்டுக்கு ஏற்ப அவற்றின் மூளையின் பருமன் மாறுபடுகின்றது என்று கூறப்படுகிறது .




அப்ப உங்கட மூளை எப்படி எண்டு பாருங்கோ .அப்டியே மூளை நினைக்கிறதை பின்னுட்டமா போடுங்கோ    



   










                                                                 மனித மூளை  



பறவைகளின்   மூளை
 

முயலின் மூளை    





தவளையின் மூளை